Monday 2 May 2016

இனிப்பு பணியாரம்


தேவை
இட்லிஅரிசி -- 11/2  கப்
ப.அரிசி -- 1/2 கப்
ஜவ்வரிசி -- 1/4கப்
உளுந்து -- 1/4கப் 
வெந்தயம் -- 1 டீஸ்பூன்
கருப்பட்டி --  11/2 கப்
ஏலக்காய் -- 2
சமையல் சோடா -- 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் -- 1/4 கப்
எண்ணெய் -- பொறிக்க

செய்முறை
அரிசிகள் ,பருப்பு, வெந்தயம் இவற்றை ஒன்றாக நனைத்து ஊற வைக்கவும்.ஜவ்வரிசியைத் தனியாக ஊற வைத்து எல்லாம் சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.உப்பு சிறிது சேர்க்கவும்.
கருப்பட்டியுடன் கால் கப் நீர் சேர்த்து சுட வைக்கவும். மாவுடன் சற்று சூடான கருப்பட்டி கரைசல், தேங்காய், ஏலப்பொடி சேர்த்து அந்தக் கலவையுடன் பொடி செய்த வெல்லம், ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
நெய்யில் மிகப் பொடியாக நறுக்கிய திராட்சை, பேரீச்சை, பாதாம், முந்திரி வறுத்து சேர்க்கவும்.
3/4 கப் எண்ணையுடன் 1/4 கப் நெய் சேர்த்து காய வைத்து, சிறு கரண்டியால் விட்டு பணியாரம் செய்தால் நல்ல ருசியாக இருக்கும்.
கருப்பட்டி சேர்த்த இந்தப் பணியாரம் உடலுக்கு நல்லது. இதற்கு பதிலாக இதே அளவு வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment