Sunday 22 May 2016

முடக்கத்தான் கீரை தோசை

தேவை
ழுங்கல் அரிசி  200 கிராம்
வெந்தயம், உளுத்தம்பருப்பு  தலா 2 டீஸ்பூன்
முடக்கத்தான் கீரை  இரண்டு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக ஊற வைத்து… ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முடக்கத்தான் கீரையையும் சேர்ந்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மாவை தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, லேசாக எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
இட்லி மிளகாய்ப் பொடியை தோசையின் மேலே தூவி சாப்பிடலாம். முடக்கத்தான் கீரை… கால்வலி, மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

No comments:

Post a Comment