Friday 6 May 2016

மசாலா தட்டை

தேவை 
புழுங்கல் அரிசி -- 1 கப் 
பொட்டுக்கடலை பொடி -- 1/2 கப் 
சீரகம் -- 1/2 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகுப்பொடி --1/2 டீஸ்பூன்
காரப்பொடி -- 1/2 டீஸ்பூன் 
பெருங்காயப்பொடி -- சிறிது
உப்புபொடி -- தேவையான அளவு 
விழுது நெய் --2 டேபிள்ஸ்பூன் 
கருவேப்பிலை -- 1 கொத்து 
எண்ணை  -- பொறிக்க
மசாலாவிற்கு 
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு 
இரண்டையும் நைசாக அரைக்கவும்.
செய்முறை 
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த மசாலா, ஊறவைத்த கடலைப் பருப்பு, கருவேப்பிலை, மிளகுப்பொடி, காரப்பொடி, சீரகம், பெருங்காயம், நெய்  சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
சிறு உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு தட்டைகளாகத் தட்டி முள் கரண்டியால் சிறு ஓட்டைகள் போடவும்.
எண்ணையைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறிக்கவும். 
எண்ணையை வடியவைத்து எடுத்து வைக்கவும்.



No comments:

Post a Comment