Saturday 7 May 2016

வாழைத் தண்டு மோர்க்கூட்டு

தேவை
வாழைத் தண்டு-- 1
லேஸாக புளித்த மோர்-- 1/2 கப்
தேங்காய்-- 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-- 2
தேங்காய் எண்ணை-- 2 தேக்கரண்டி
கடுகு-- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-- 1 தேக்கரண்டி
அரிசி மாவு-- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை-- 2 கொத்து
உப்பு-- தேவையான அளவு

செய்முறை


வாழைத்தண்டை பொடித்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அளவான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

தேங்காய், பச்சை மிளகாயை சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

வெந்த வாழைத் தண்டை வடியவைத்து, அத்துடன் தேவையான உப்பு, தயிர், அரைத்த விழுது, அரிசி மாவு சேர்த்து கொதிக்க வைக்கவும். கூட்டு சேர்ந்து கொண்டதும் இறக்கவும்.

தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த மோர்க்கூட்டு சாம்பார், மற்றும் வத்தல் குழம்பு சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment