Sunday 1 May 2016

மோகன் தால்





தேவை 
கடலை மாவு - 1/4 கிலோ
நெய் - 1/4 கிலோ
கோவா – 100 கிராம்
பால் – 1/8 கப்
சீனி – 150 கிராம்
ஏலப்பொடி, குங்குமப்பூ – சிறிது
துண்டாக்கிய பாதாம், மிந்திரி துண்டுகள்.
செய்முறை:
கடலை மாவை நன்கு சலித்து, நான்கில் ஒரு பங்கு நெய்யை உருக்கி விட்டு, பாலையும் கை பொறுக்கும் சூடாக விட்டுப் பிசறி, (அரிசி பிட்டுக்கு பிசறுவது போல்) நான்கு மணி நேரம் வைக்கவும். 




கோவாவை நன்கு உதிர்த்து, 2 ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். குங்குமப்பூவை சிறிது வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.
பிசறிய கடலை மாவை ஒரு சல்லடையில் நன்கு அழுத்தி, கட்டிகளின்றி சலிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் அளந்து கொண்டு, அதில் பாதி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். (75 கிராம் சரியாக இருக்கும்). மீதியுள்ள நெய்யைக் காய வைத்து அதில் சலித்த மாவைப் போட்டு நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். அதிலேயே வறுத்து வைத்துள்ள கோவாவை சேர்த்து, மேலும் இரண்டு பிரட்டு பிரட்டி வேறு பாத்திரத்தில் கொட்டவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் வரை நீர் விட்டு கெட்டி கம்பி பாகு வைக்கவும். 


அதில் வறுத்த மாவு, ஏலபொடி, குங்குமப்பூ சேர்த்து விடாமல் கிளறவும். பத்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே துண்டாக்கிய மிந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும். துண்டுகளாக்கி பரிமாறவும்.

No comments:

Post a Comment