Saturday 7 May 2016

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவை
உப்பில் ஊறவைத்து, காயவைத்த மணத்தக்காளி வற்றல்  25 கிராம்
புளி  ஒரு எலுமிச்சை அளவு
வற்றல் குழம்பு பொடி  4 டீஸ்பூன்
வெந்தயம், கடுகு, துவரம்பருப்பு  தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
எண்ணெய்  4 டீஸ்பூன்
உப்பு  சிறிதளவு.
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
 மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம்.
மணத் தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை  ஆறவைக்கும்.

No comments:

Post a Comment