Wednesday 25 May 2016

காரட் ரைஸ்



சாதம்  - 3 கப் 
பெரிய வெங்காயம் -1
உரித்த பட்டாணி - 1/2 கப்
தாளிக்க
கடுகு -  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு  -  2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்  -  2
மிளகாய் வற்றல்  -  2
கறிவேப்பிலை 
வறுத்து அரைக்க
பெருங்காயம்  - சிறு துண்டு
தேங்காய்த்துருவல்  -  5 டீஸ்பூன்
தனியா  -  2 டீஸ்பூன்
ஜீரகம்  -  2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4
கடலைப்பொடி  -  4 டீஸ்பூன்   
எண்ணெய் -  5 டீஸ்பூன்
நெய் -  3 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
செய்முறை
காரட்டை துருவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பெருங்காயம், ஜீரகம், தனியா, மிளகாய் வற்றல், தேங்காய்  வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.











மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், ப.மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் வதக்கவும்.



வெங்காயம் வதக்கியதும் அதில் காரட், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.


நன்கு வதக்கி சேர்ந்து கொண்டதும், கடலைப்பொடி மற்றும் அரைத்தபொடி சேர்த்து நன்கு கலக்கவும்.




அதிலேயே சாதம் சேர்த்து, கேசை சிறிதாக்கி, நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கடலை வறுத்து சேர்க்கலாம்.









No comments:

Post a Comment