Monday 23 May 2016

கடலை மாவு லாடு

தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 250 கிராம்
நெய் - 150 கிராம்
கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்
ஈக்வல் (Artifical Sweetener Equal) - ¼ கப்
ஏலப்பொடி - ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் 
(
தேவையெனில் சேர்க்கவும்) - தேவையான அளவு

செய்முறை

கடலை மாவை சலித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து வைக்கவும். பின்பு, எல்லா நெய்யையும் விட்டு உருகியதும், கடலை மாவைப் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும்.

கடலை மாவு நிறம் மாறி, வாசனை வந்ததும், அதில் உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து, ஈக்வலைச் சேர்க்கவும். அது கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுலபமான, சுவையான கடலை மாவு லாடு, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது!




No comments:

Post a Comment