Thursday 25 February 2016

சாமை பால் பாயசம்

சாமை பால்  பாயசம்

தேவை

பால்---  1 லிட்டர்
சாமை அரிசி---5 டேபிள்  ஸ்பூன் 
சர்க்கரை--- 1 கப்
முந்திரிப்  பருப்பு--- 15
பாதாம் பருப்பு ---10 (வெந்நீரில் ஊறவைத்து  தோலி நீக்கவும்.) 
ஏலக்காய்--- 8
குங்குமப்பூ---  சிறிது

செய்முறை

பாலை  குக்கரில்  விட்டு  அதில்  சாமை அரிசியை  நன்கு  களைந்து  போட்டு  ஆவி  வந்ததும்  வெயிட்டைப் போடவும்.

கேசை சிம்மில்  அரை  மணி  நேரம்  வைக்கவும்.  அணைத்துவிடவும்.

குக்கரைத் திறந்து கேசை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும்.

முந்திரி, பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு சற்று ஊறியதும் சிறிது பாலுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரிசி  வெந்து  பால்  கெட்டியாகி  இளமஞ்சள்  நிறமானதும்அதில்சர்க்கரை  சேர்க்கவும்.  சர்க்கரை  கரைந்து  சேர்ந்து  கொண்டதும்முந்திரி, பாதாம் அரைத்த விழுதை  சேர்க்கவும். கைவிடாமல் கிளறவும். 

ஏலக்காயைப்  பொடி  செய்து  போட்டுகுங்குமப்பூவை  போட்டு  மேலும் ஐந்து  நிமிடம்  கொதிக்க  வைத்து  இறக்கவும்.
முந்திரிப் பருப்பை  சீவிப்  போட்டு சூடாகவோகுளிர  வைத்தோ கப்புகளில் ஊற்றி  பாயசத்தைப்  பரிமாறவும். 

இதில் பாலின் அளவைக் குறைத்து மில்க்மெயிட் சேர்த்தும் செய்யலாம். ஆனால் முழுவதும் பாலில் செய்யும் சுவை இருக்காது.


அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தில் செய்யும் சுவையான பாயசம் இது.  

 





No comments:

Post a Comment