Thursday 21 May 2015

முளைக்கீரை மசியல்

 

தேவை

முளைக்கீரை---1 கட்டு
துவரம்பருப்பு---¼ கப்
பெருங்காயம்---சிறு துண்டு.
சர்க்கரை---   தேக்கரண்டி
உப்பு---தேவையான அளவு
அரைக்க
ஜீரகம்---1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்---2
தேங்காய்த் துருவல்---3 மேசைக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய் ---2 தேக்கரண்டி
கடுகு----1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு---1 1/2 தேக்கரண்டி

செய்முறை

கீரையை நன்கு அலசி அலம்பி, பொடியாக நறுக்கவும்.

துவரம்பருப்பை குக்கரில் வேக விடவும்.

கீரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம்,சர்க்கரை சேர்த்து வேகவிடவும்.

சர்க்கரை சேர்ப்பதால் கீரை நிறம் மாறாது. குக்கரில் வைத்து வேகவிட்டால் கறுத்துவிடும். தனி பாத்திரத்தில் வேகவிடவும்.

கீரை நன்கு வெந்ததும், மேலே அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்க்கவும். கீரை நன்கு வேகாத மாதிரி இருந்தால், அரைத்த விழுதுடன் கீரையை சேர்த்து விப்பரில் ஒரு  வினாடி சுற்றவும்.

அத்துடன் வெந்த துவரம்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக இல்லாமல் சற்று நீர்க்க இருந்தால், 1 தேக்கரண்டி அரிசிமாவு சேர்த்து கிளற, கெட்டியாகிவிடும்.

இறக்கி தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

இந்தக் கீரை சாம்பார், வத்தக் குழம்புக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். 

முளைக்கீரை தவிர அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, பசலைக் கீரையிலும் இது போல மசியல் செய்யலாம். 

துவரம்பருப்புக்கு பதிலாக, பயத்தம்பருப்பு சேர்க்கலாம். 

மிளகாய் வற்றலுக்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.




No comments:

Post a Comment