Thursday 7 May 2015

ஸோமாசி

தேவை

பூரணத்திற்கு

பொட்டுக்கடலை--- 1 கப்
சர்க்கரை--- 11/2 கப்
கொப்பரைத்துருவல்--- 3/4 கப்
இனிப்பில்லாத கோவா---4 மேசைக் கரண்டி 
கசகசா--- 5 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி--- 3 தேக்கரண்டி

மேல் மாவிற்கு

பொடி ரவை --- 3 கப்
நெய்--- 4 தேக்கரண்டி
உப்பு--- 2 சிட்டிகை
ரீஃபைன்ட் எண்ணை--- வேகவிட

செய்முறை


பொட்டுக்கடலை மற்றும் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். சர்க்கரையையும் நைசாக அரைக்கவும். இவற்றுடன் கொப்பரைத்துருவல், கோவா, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது உள்ளே வைக்கும் பூரணம் தயார்.



 

ரவையை மிக்சியில் நைசாக அரைக்கவும். அத்துடன் உப்பு, நெய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். இந்த மாவு 1/2 மணி நேரம் ஊற வேண்டும். 

பிசைந்த ரவையை மேலும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு அடித்துப் பிசைந்து மிருதுவாக்கவும். அதை சிறு உருண்டைகளாக்கி, உருண்டைகள் காயாமல் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

சப்பாத்திக் கல்லில் சிறு பூரிகளாக இடவும். அவற்றில் 11/2 தேக்கரண்டி பூரணம் வைக்கவும். ஒரு காது சுத்தம் செய்யும் இயர் பட்டை நீரில் நனைத்து பூரியின் ஓரங்களில் தடவவும். பூரியை அரை வட்டமாக மூடி ஓரத்தை ஸோமாசிக் கரண்டியால் கத்தரிக்கவும்.








 எண்ணையைக் காய வைத்து, அதில் ஸோமாசிகளைப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். பூரணம் வைத்து மூடிய ஸோமாசிகளை காயவிடாமல் உடனுக்குடன் பொறிக்கவும்.






சுவையான ஸோமாசி ரெடி! செய்வது சற்று சிரமம் என்றாலும் இனிப்புகளில் இது ராணி!! 




சில குறிப்புகள் 

இதில் ரவைக்கு பதிலாக மைதா சேர்த்து செய்யலாம். ஆனால் ரவையில் செய்வது போல அத்தனை மொறுமொறுப்பாக இருக்காது.

அரிசிமாவில் நெய்யை சேர்த்து பதிர் குழைத்துக் கொண்டு, ரவை மாவை சப்பாத்திகளாக இட்டு அவற்றின் இடையில் குழைத்த பதிரைத் தடவி, 3 சப்பாத்திகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு, பாய் போல சுருட்டி, அவற்றை துண்டுகளாக வெட்டி, அதனை பூரியாக்கி, அதில் பூரணம் வைத்து செய்தால் நல்ல ருசியாக இருக்கும். இந்த முறையில் செய்வது வேலை அதிகம்! 


இதில் கோவா சேர்க்காமலும் செய்யலாம். சில முந்திரி, பாதாம் பருப்புகளை நைசாகப் பொடித்து பூரணத்துடன் சேர்த்து செய்யலாம். 

No comments:

Post a Comment