Monday 4 May 2015

கற்கண்டு ஃப்ரூட் பொங்கல்


தேவை

தினை - 1 கப்  
பயத்தம்பருப்பு- ¼ கப், 
பனங்கற்கண்டு -1 கப்
கல்கண்டு - ½ கப்
பால்- 1 கப் 
தேங்காய்ப்பால் - ½ கப்
நெய் - ½ கப்
ஏலக்காய்பொடி- 2 தேக்கரண்டி 
மிந்திரி பருப்பு- 10
திராட்சை - 10 
பாதாம் - 10 
சிறியதாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை பழத் துண்டுகள் -  1 கப்
குங்குமப்பூ - சில இதழ்கள் 

செய்முறை

தினையை வெறும் வாணலியில் வாசனைவர வறுக்கவும். பயத்தம்பருப்பையும் சற்று வறுத்து இரண்டையும் களைந்து குக்கரில் பாலுடன் 1½ கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து அடுப்பில் வைத்து கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறவும். பனங்கற்கண்டு மற்றும் வெள்ளைக் கல்கண்டை பொடியாக்கி அத்துடன் சேர்த்துக் கிளறவும். 

மிந்திரி, பாதாமை சிறு துண்டுகளாக்கவும். ¼ கப் நெய்யை சுடவைத்து அதில் மிந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

மீதமுள்ள நெய்யில் பழத்துண்டுகளை 2 நிமிடம் வதக்கி அத்துடன் சேர்த்து கிளறவும். ஏலப்பொடி, குங்குமப்பூவை சேர்க்கவும். சுவையான தினைப் பொங்கல் தயார்! 

சிறு தானியங்களான தினை , வரகு, குதிரைவாலி, சாமை போன்றவற்றில் சத்து அதிகம். அரிசிக்கு மாற்றாக இவற்றில் பொங்கல் செய்து சாப்பிடுவது நல்லது. இதே போன்று இத்தானியங்களில் வெண்பொங்கலும் செய்யலாம்.



No comments:

Post a Comment