Monday 30 March 2015

UGADI SPECIAL



யுகாதி பச்சடி


ஆந்திர வருடப் பிறப்பான யுகாதிக்கு செய்யும் இந்த பச்சடி சுவையானது. இதில் அறுசுவைகளும் இணைந்திருக்கும்.

தேவை
புளி --- சிறு எலுமிச்சை அளவு
வெல்லம் --- 1/2 கப்
மாங்காய் --- சிறியது 1
புதிய வேப்பம்பூ--- 2 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி --- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்--2
வாழைப்பழ துண்டுகள்--4 டேபிள்ஸ்பூன்
உப்பு--தேவையான அளவு

செய்முறை
புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். அதில் வெல்லம் பொடி செய்து போட்டுக் கரைக்கவும்.மாங்காயை சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இவற்றுடன் உப்பு, காரப்பொடி,வேப்பம்பூ, வாழைப்பழ துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். அறுசுவையுடன் யுகாதி பச்சடி மிக ருசியாக இருக்கும்.

Sunday 29 March 2015

Ugadi Special Sweet


Bobattu
Chanadal-1 cup
Jaggery--11/4 cup
maida--3/4 cup
Wheat flour--1/2 cup
Cardamom--5
Salt--a pinch
Ghee, Oil,
Rice Flour...4 Tblspoon for dredging.

Method...
Mix maida and wheat flour with salt and oil and enough water to make a soft and stiff  dough. Knead well and close it for an hour.

Soak chanadal in water for 1/2 an hour.Boil in a cooker and strain. Add jaggery with dhal and boil till the mixture thicken. Remove and cool.Grind to a fine paste. Make small balls from this.
Take a small banana leaf or thick plastic sheet and grease with oil. Also grease your hands with oil. Place maida ball in the centre and make a small round with hands. Place chanadhal ball and fold the edges. Fold  the edges and gently flatten each ball carefully with your fingers to form a 6"diamater flat circular poli or dredge with rice flour and make like chappaathis also.

Fry it on low flame in a hot tava. Roast both sides till brown. Smear with ghee on both sides.
This Bobattu is a special sweet for Ugadi in Andhra..It called Puranpoli in Maharashtra and a special for their new year Gudi Padwa.

Sunday 15 March 2015

காலி ஃ ப்ளவர் கூட்டு



தேவை
காலிஃளவர்--சிறியது-- 1

உரித்த பச்சைப் பட்டாணி--- 1/2 கப்

துவரம்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு -- 1/4 கப்

சாம்பார் பொடி-- 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணை (வறுக்க, தாளிக்க) 4டீஸ்பூன்

கருவேப்பிலை-- 2 கொத்து

உப்பு-- தேவையான அளவு



வறுத்து அரைக்க
பெருங்காயம்- 1 சிறு துண்டு

கடலைப் பருப்பு-- 2 டீஸ்பூன்

தனியா-- 3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்--- 4

துருவிய தேங்காய்--- 5 டேபிள்ஸ்பூன்


தாளிக்க
கடுகு-- 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு-- 11/2 டீஸ்பூன்

நிலக்கடலை--1 டீஸ்பூன்


செய்முறை
காலிஃப்ளவரை சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் போட்டு வைத்து பொடியாக நறுக்கவும்.பட்டாணியை உரிக்கவும்.

பாத்திரத்தில் காலிஃப்ளவரையும், பட்டாணியும்  போட்டு முழுகும் வரை நீர் விட்டு வேக விடவும். தேவையான உப்பு, சாம்பார்பொடி சேர்க்கவும்.

வறுக்க கொடுக்கப் பட்டுள்ள சாமான்களை 3 டீஸ்பூன் எண்ணையில் வரிசையாக சிவக்க வறுக்கவும்.அவற்றுடன் தேங்காயைச் சேர்த்து நைசாக அரைக்கவும்.


துவரம்பருப்பை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகள்  நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்து, தேங்காய் எண்ணையில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலை  சேர்த்து சிவந்ததும் கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும்.கருவேப்பிலை சேர்க்கவும்.
சப்பாத்தியுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிட இந்தக் கூட்டு அருமையாக இருக்கும்.

Wednesday 11 March 2015

காரடை...


காரடையான் நோன்பு ஒவ்வொரு வருடமும் மாசியும்,பங்குனியும் கூடும் நாளில் வரும்.

இது கணவனின் நலன் வேண்டி அவரது நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீகாமாக்ஷி தேவியை வேண்டி மனைவியர் செய்யும் நோன்பு. திருமணமாகாத பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். விரதம் இருக்க வேண்டிய தேவையில்லை.

'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதனால் இதை பங்குனியில் செய்வதை விட மாசி மாதம் இருக்கும்போதே செய்ய வேண்டும்.
சாவித்திரி தன கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்க வேண்டி,காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இந்த நோன்பு செய்ததாக ஐதீகம்.