Thursday 30 January 2014

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:
உருளைக் கிழங்கு - ¼ கிலோ
சர்க்கரை -  300 கிராம்
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய்
பால் - ¼ கப்

செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு அலம்பி, வேகவைத்து, தோலியை நீக்கி, மசிய அரைக்கவும். முந்திரியை பால் விட்டு அரைத்து உருளைக் கிழங்கு விழுதுடன் சேர்க்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் ½ கப் நீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகு கம்பி பதம் வந்ததும், உருளைக் கிழங்கு விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறி நெய்யை விட்டு சுருண்டு வரும்வரை கிளறவும்.

கேசரிபவுடர், ஏலப்பொடி செய்து போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.



1 comment:

  1. எல்லோருக்கும் புதுவிதமாக ‘ஹல்வா’ கொடுத்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete